Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி

27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடும், பொதுவாக குழப்பமும் நிலவும் நிலையில், CNN-IBN தொலைக்காட்சியில் கரண் தபாருடனான ஒரு நேர்முகப் பேட்டியில், மேற்பார்வைக் குழுவின் (Oversight Committee) தலைவர் ஆன வீரப்ப மொய்லி, பின் வருமாறு கூறியுள்ளார்.

1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !

2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.

3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.

4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.

5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.

6. ஆகஸ்டு 31-ஆம் தேதி, மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !

திரு.வீரப்ப மொய்லி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, "எடுத்தோம், கவுத்தோம்!" என்றில்லாமல், பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

17 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தாமல் தள்ளி போட்டது தவறு என கூறி தருமி அய்யா ஒரு இடத்தில் சொன்னது தள்ளிப்போட போட இவர்கள் இடஒதுக்கீட்டை செரித்துவிடுவார்கள் என்றார் அவர் சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற பயம் உள்ளது, ஆனாலும் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தை தாங்கிப்பிடிப்பவர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்பதால் இன்னமும் நம்பிக்கையிழக்கவில்லை,

மற்றபடி வீரப்ப மொய்லி சொன்னது நிச்சயம் இடஒதுக்கீட்டை செரிக்க செய்யும் முயற்சி என்பதால் அதற்க்கு என் கண்டனத்தை இங்கு தெரிவிக்கிறேன்... மீண்டுமொரு நெடிய போராட்டத்திற்கு இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தயாராக வேண்டியதுள்ளது.

குழலி / Kuzhali said...

இனி வீரப்ப மொய்லியை பாராட்டி பற்பலர் கிளம்புவார்கள் பாராட்டுபவர்களை வைத்தே நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்...

ALIF AHAMED said...

இது ஒரு தொலைனோக்கு திட்டம்

ம்

பார்கலாம்...

enRenRum-anbudan.BALA said...

குழலி,
கருத்துக்களுக்கு நன்றி.

//இனி வீரப்ப மொய்லியை பாராட்டி பற்பலர் கிளம்புவார்கள் பாராட்டுபவர்களை வைத்தே நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்...
//
வீரப்ப மொய்லியை பாராட்டுபவர்கள் அனைவரும் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் என்று பொதுமைப்படுத்துவது தவறானது என்பது என் கருத்து ! அதே போல், வீரப்ப மொய்லியை எதிர்ப்பவர்கள் அனைவரும் க்ரீமி லேயர் ஆதரவாளர்கள் என்றும் கூற முடியாது இல்லையா ???

ரிசர்வேஷனை implement செய்வது குறித்து இரு வேறு கருத்துக்கள் இருக்கும், அவ்வளவு தான் !

"பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. "
என்று தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

மின்னுது மின்னல்,
நன்றி, பார்க்கலாம் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

குழலி / Kuzhali said...

பாலா இந்த திட்டங்கள் மேலும் மேலும் இடஒதுக்கீட்டை தாமதம் மட்டுமே படுத்துமொழிய அமல்படுத்த தாமதப்படுத்தப்படும் ஒவ்வொரு நிமிடமும் அதை செரிக்க செய்யும் என்பதே உண்மை,இங்கே கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்

//1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !
//
இது மிரட்டாமல் என்பதை விட வலியுறுத்தல் என்ற வார்த்தைய பயன்படுத்த விரும்புகிறேன், உயர்கல்வி நிறுவனங்களை வலியுறுத்தாமல் வேறெப்படி செய்யமுடியும், ஏனெனில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப்பதவிகள் உயர் ஆதிக்க சாதியினரிடம் தானே உள்ளன, அவர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள், எய்ம்ஸ் வேணுகோபால் இதை முதலில் ஒத்துக்கொள்வாரா? அதையும் தாண்டி நீதிமன்றம் சென்றால் அங்கே அதைவிட கொடுமை, பச்சையாக பாரபட்சம் பார்க்கின்றனர், இதை மீறி வலியுறுத்தாமல் எப்படி இடஒதுக்கீட்டை அமல் செய்யமுடியும், இதுவே இடஒதுக்கீட்டை செரிக்க செய்துவிடும்.

//2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.
//
பெரும்பால நிறுவனங்களின் தலைமைப்பதவி உயர் ஆதிக்க சாதி வேணுகோபால்களிடம் தானே உள்ளது, மற்றபடி இதற்கும் மேலே உள்ள கருத்தே

//3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.
//
முந்தைய இரண்டிற்கும் உள்ள கருத்தே இதற்கும்

//4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.
//
சமூக நீதிக்கு இடஒதுக்கீடு தேவை என்று முடிவு செய்தபின் அது ஏன் கட்டம் கட்டமாக? கட்டம் கட்டமாக என்னும்போதே அது முழுமையாக அமலாகும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன் போகாதே. யாரை ஏமாற்ற இது?

//5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.
//
முதல் மூன்று கருத்துகளே இதற்கும்

//7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !
//
ஏற்கனவே தரம் என கூக்குரலிடும் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களின் கூச்சலுக்கு ஆதரவு குரல் மாதிரிதான் உள்ளது இது...

தருமி said...

//இது ஒரு தொலைனோக்கு திட்டம் //
ஆம், இது உடனே நடக்க வேண்டிய ஒன்றை தொலைவில் வைக்கப் பார்க்கும் திட்டம்.

said...

///7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !///

:-)))))))))))))

இதை தான் ரவிஸ்ரீனிவாஸ் பலகாலமாக சொல்லிக்கொண்டே இருந்தார்.இப்போது அரசே அவர் நிலை சரி என்று சொல்லியிருக்கிறது.அவரை இகழ்ந்து பேசி,ஏகடியம் செய்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் என்பது நிருபணமாகியுள்ளது.

Ravi srinivas stands vindicated.All of you guys should apologize to him.

said...

//2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.//

ஒன்றும் அவசரம் இல்லை.மெதுவாக,நிதானமாக பேச்சு வார்த்தை நடத்தலாம்.எடுத்தேன்,கவிழ்த்தேன் என முடிவெடுக்க கூடாது:-))))

said...

Ravisrinivas stands vindicated.

http://www.ibnlive.com/news/quota-will-add-80000-extra-seats/17783-3.html

Veerappa moily Commitee's report says

""The OBC reservation should not be extended to these categories and must be confined to the postgraduate diploma and equivalent programmes only," the sub-group said, adding there must be ‘no unjustifiable’ demand on institutes to lower admission standards.

Echoing similar views, the sub-group on engineering and technology said "the issue of academic excellence was a major concern" and under no circumstances should the cut-off figure be lowered to accommodate or fill the reserved seats for OBCs"

அப்பாவித்தமிழன் said...

//இனி வீரப்ப மொய்லியை பாராட்டி பற்பலர் கிளம்புவார்கள் பாராட்டுபவர்களை வைத்தே நோக்கத்தை அறிந்து கொள்ளலாம்...//

குழலி சொல்வது மிகவும் சரி. சிறிது நாட்களுக்கு முன்பு இப்படிதான் அர்ஜூன் சிங்கை பாராட்டி ஒரு கூட்டம் கிளம்பியது. பார்ப்போம், மொய்லி ஜுஜ்ஜு குட்டியா? மொஜ்ஜு குட்டியா என்று!

CT said...

I am happy to hear that there are some people who are still sensible and their brains are working.
"அரசாங்கத்தை தாங்கிப்பிடிப்பவர்கள் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள்..."
This is true but it would be more nice if we say these people will force the center to implement by blackmailing........Today MK and his allies can get anything and do anything without a rational debate except changing the polarity of the earth.
Thanks for the blog.If whatever the anonymous says are true, I am pretty confident india can still fly high.

enRenRum-anbudan.BALA said...

குழலி,
//ஏனெனில் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களின் தலைமைப்பதவிகள் உயர் ஆதிக்க சாதியினரிடம்
தானே உள்ளன, அவர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள், எய்ம்ஸ் வேணுகோபால் இதை முதலில்
ஒத்துக்கொள்வாரா? அதையும் தாண்டி நீதிமன்றம் சென்றால் அங்கே அதைவிட கொடுமை, பச்சையாக
பாரபட்சம் பார்க்கின்றனர்,
//
தலைமையில் இருக்கும் எல்லா உயர் சாதியினரும், ஒரே மாதிரி (100% இடஒதுக்கீட்டை எதிர்ப்பவராக) இருப்பர் என்று கூறுவது சரியானதா ? அப்படியானால், நடைமுறைப்படுத்த அவர்கள் கூறும் திட்டங்கள்
ஏற்றுக் கொள்ளத் தக்கது இல்லை என்கிறீர்களா ? இந்த 5 துணைக்குழுக்களில் எத்தனை பேர் உயர் சாதி / பிற்படுத்தப்பட்டவரின் பிரதிநிதிகள் என்பது தெரியவில்லை.

//சமூக நீதிக்கு இடஒதுக்கீடு தேவை என்று முடிவு செய்தபின் அது ஏன் கட்டம் கட்டமாக? கட்டம் கட்டமாக
என்னும்போதே அது முழுமையாக அமலாகும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயன்
போகாதே. யாரை ஏமாற்ற இது?
//
ஒரே கட்டத்தில், எல்லா கல்வி நிறுவனங்களிலும், சீட்களின் எண்ணிக்கையை அதிகரித்து, புதிய ஆசிரியர்களை சேர்த்து, Infrastructure-யை மேம்படுத்தி, இடஒதுக்கீட்டை செயல்முறைக்கு கொண்டு
வருவது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. சிலவற்றில் உடனடியாக செய்ய இயலலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா
***************************************

enRenRum-anbudan.BALA said...

Anonymous friends, அப்பாவித்தமிழன்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

CT,
Thanks for your comments. As usual, our cunning politicians of Tamilnadu will make the right noises (at the right time) to create an impression that they are the champions of social justice though their aim is to get the votes to stay in power (for highly obvious reasons !!!)

என்றென்றும் அன்புடன்
பாலா

CT said...

Bala
You are welcome.Thanks for using the right words to refer TN politicians.
To me the word social justice is just a capsule to coverup so many things.politicians and we the people have to turn the pages in the history ,it is 57 years and still we are trying to divide and rule.Sometimes I get upset when few bloggers use this word to project themselves as GANDHI's here.Why can't we be practical and be real to the todays world,I remember once calgary siva said how many people in todays world are studying vedha .....i stand by that
Actually I wanted write this , but you have already defended like a professional.Still we need to talk like this
"உயர் ஆதிக்க சாதியினரிடம் ..
.......
பச்சையாக
பாரபட்சம் பார்க்கின்றனர் "
Why the hell we should bring in caste for every thing, atleast we should be happy still justice prevails and judges are allowed to use their cells.I am glad Some of the courts are not run by CM and PM like katta panchayat where you can shout
"Nattamai Theerpai maathi sollu"

Have a geat day BALA .

Muthu said...

அப்பாவி,

:))

அர்ஜுன் சிங் ஆரம்பித்து வைத்துவிட்டார்.இது அவ்வளவு சீக்கிரத்தில் அடங்காது. இந்த உரிமை வென்றெடுக்கப்படும்.

அவர் சந்தேகமில்லாமல் புஜு்ஜுிகுட்டிதான்.

ச.சங்கர் said...

அதுசரி...இட ஒதுக்கீடை பால் பவுடராக்கப் போரீங்களா(அமுல்)...:)

enRenRum-anbudan.BALA said...

CT, Muthu, Sankar,

நன்றி !

//அதுசரி...இட ஒதுக்கீடை பால் பவுடராக்கப் போரீங்களா(அமுல்)...:)
//
Sorry :)))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails